Monday, May 27, 2013

ஸ்ரீ.சு.கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரனின், பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரனின், பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும், வாகன சாரதியும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், தாக்குதலுக்கு இலக்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டகளப்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பிய நிலையில், வாகன சாரதியும், பொலிசாரும், வவுனியா பிரதேசத்தில் இரவு நேர உணவுக்காக சென்றபோது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தில் சிறிய காயங்களுக்குள்ளான சாரதி, தப்பிவந்து விபரங்களை தனக்கு தெரிவித்ததாக கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

15 பேர் கொண்ட குழுவினரே தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு உடனடியாக முறைப்பாடுகளை தெரிவித்ததாகவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment