Tuesday, August 27, 2013

தமிழகத்தை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டம்! பொலிஸார் உசார் நிலையில்!

இந்தியாவை தொடர்ச்சியாக குறிவைத்து தாக்கிவரும் பாகி ஸ்தான் தீவிரவாதிகள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளை தாக்கியபோதும் இதுவரை தமிழ் நாட்டில் கைவரிசை காட்டியதில்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை தகர்க்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உளவுத் துறை எச்சரித்தது. இதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் தீவிரவாதிகளின் திட்டம் வெற்றி பெறவில்லை.

தமிழ் நாட்டுக்குள் ஊடுருவி மிகப்பெரும் தாக்குதல்களை நடத்த லஷ்கர்–இ–தொய்பா திட்டமிட்டு இருப்பதை உளவுத்துறை கண்டுபிடித்ததுள்ளது இது தொடர்பான எச்சரிக்கையை மத்திய உளவுத் துறை இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் உளவுத் துறை புதிய எச்சரிக்கை தகவல் ஒன்றை வெளியிட்டது.

அதில், "பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி மயிலாடுதுறை, மதுரை நகரங்களை தகர்க்க திட்டமிட்டுள்ளனர்" என்று கூறப்பட்டிருந்தது. இதை யடுத்து தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. கடலோர பகுதி பொலிசார், கடலோர பாதுகாப்பு படையினருடன் ஒருங்கிணைந்து 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடற்படை கப்பல்களும் தமிழக கடலோரப் பகுதிகளில் ரோந்து சுற்றி வருகின்றன.

கடலோரங்களில் சந்தேகப்படும் வகையில் மர்ம மனிதர்கள் நடமாடினால் உடனே தகவல் தெரிவிக்கும்படி கடலோர பகுதி மக்களை பொலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மீனவர்கள் போல தீவிரவாதிகள் வந்து விடக்கூடாது என்பதால், கடலுக்கு சென்று மீன் பிடித்து திரும்பும் எல்லா மீனவர்களும் பரிசோதிக்கப்படுகிறார்கள்.

கடலோரங்களில் வாகன சோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர இலங் கையில் இருந்து மிக எளிதாக வந்து இறங்கும் வசதி கொண்டதாக கருதப்படும் இடங்களில் எல்லாம் சாதாரண உடையில் பொலிலீசார் கண்காணித்து வருகி றார்கள். தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல் தொடர்பாக மத்திய உளவுத்துறை நேற்று இன்னொரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதில், "தமிழ்நாட்டுக்குள் கடல் வழியாக ஊடுருவ திட்டமிட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகள், சென்னை, எண்ணூர், தூத்துக்குடி ஆகிய 3 துறைமுகங்களையும் தகர்க்க திட்டமிட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த வாரம் உளவுத்துறை வெளியிட்ட எச்சரிக்கையில், பாகிஸ்தான் தீவிர வாதிகள் மயிலாடுதுறையை தகர்க்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் நேற்று உளவுத்துறை வெளியிட்ட தகவலில், மயிலாடுதுறை கடலோர பகுதியை தாங்கள் இறங்கும் இடமாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.

மயிலாடுதுறை பகுதியில் தரை இறங்கும் தீவிரவாதிகள் அங்கு உதவி பெற்று, பிறகு குழுக்களாக பிரிந்து சென்று தூத்துக்குடி, எண்ணூர், சென்னை துறைமுகங்களை தகர்க்கக் கூடும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டுக்குள் தரை வழியாக செல்லாமல், கடல் வழியாக வந்து சென்னை, எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களை தகர்க்கக்கூடும் என்றும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் மிகப்பெரிய தற்கொலை தாக்குதல்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதையடுத்து இந்த மூன்று துறைமுகங்களிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 3 துறைமுகங்களிலும் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தீவிரவா திகள் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் எத்தகைய பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப சென்னை, எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களில் முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 3 துறைமுகங்களை தாக்கும் அதே சமயத்தில் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தையும் கடல் வழியாக வந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று உளவுத்துறை தனது எச்சரிக்கையில் கூறி உள்ளது. இந்தியாவின் விண்வெளி ஆய்வில் இந்த மையம் முக்கியப் பங்கு வகிப்பதால், அதை சீர்குலைக்கும் நோக்கத்துடன் ஸ்ரீஹரிகோட்டாவில் தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் முயற்சி செய்யக்கூடும் என்று தெரிகிறது.

தீவிரவாதிகளின் இந்த திட்டத்தை முறியடிக்க ஸ்ரீஹரிகோட்டாவின் கடல் எல்லை பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த கடல் பகுதிக்குள் வரும் அனைத்து படகுகளும் கண்காணிக்கப்படுகின்றன

No comments:

Post a Comment