Friday, August 30, 2013

விளக்கமறியலில் வைக்கப்பட்ட இராமநாதன் நெஞ்சு வலிகாரணமாக வைத்திய சாலையில் அனுமதி!

14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண சபையின் வேட்பாளர் அங்கஜன் இராமநாதனின் தந்தையான இராமநாதன் யாழ் போதனா யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர், சாவக்கச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவக்கச்சேரி நீதவான் லெனின் குமார் உத்தர விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

No comments:

Post a Comment