Monday, August 26, 2013

முன்னாள் ஜனாதிபதி மும்மர் அல் கடாபியின் திடுக்கிடும் பாலியல் கொடுமைகள்!

லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி மும்மர் அல் கடாபி பள்ளிச் சிறுமிகளை வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர் பான புதிய புத்தகம் ஒன்றில் பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த சிறுமிகளை அவர் பாலியல் அடிமை யாக வைத்திருந்தார் என்றும், தனது கோட்டைக்குக் கீழே அறை அமைத்து அவர்களை அடைத்து வைத்து பாலியல் ரீதியாக அவர்களை தனது இச்சைக்குப் பயன்படுத்தி வந்ததாகவும், Gaddafi's Harem: The Story Of A Young Woman And The Abuses Of Power In Libya என்ற தலைப்பிலான அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் அன்னிக் கோஜீன் இதை எழுதியுள்ளார். இந்த நூல் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த நூலில் இடம் பெற்றுள்ள சில தகவல்கள். கண்ணில் எந்த அழகான சிறுமி பட்டாலும் உடனே அவர்களைக் கடத்தி வருமாறு தனது மெய்ப்பாதுகாவலர்களுக்கு உத்தரவிடு வாராம் கடாபி. இவ்வாறு கடத்தி வரப்பட்டு சித்திரவதைக்குள்ளான ஒரு சிறுமிதான் சொரயா. இவருக்கு அப்போது 15 வயதாகும். ஐந்து வருடங்கள் இவரைச் சீரழிந்துள்ளார்.

தன்னை தினசரி கடாபி வல்லுறவுக்குட்படுத்தியதாக அவர் கூறியுள்ளார் அவர். மேலும் கடாபி மட்டுமல்லாமல் அவரது மெய்ப்பாதுகாவலர்களும் தன்னை இசைக்கு கட்டாயப்படுத்தி சீரழித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பள்ளிச் சிறுமிகள் மட்டுமல்லாமல், வெளிநாட்டுத் தூதர்களின் மனைவிமார்கள், பிரபல பெண்மணிகள் என யாரையும் விட்டுவைக்கவில்லையாம் கடாபி. பெண் மெய்ப்பாதுகாவலர்களை தனக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக என்று கூறிய போதிலும் அவர்களையும் பாலியல் அடிமை போலவே நடத்தி வந்தாராம் கடாபி. அவர்களில் பலருக்கு துப்பாக்கியைப் பிடிக்கவே தெரியாதாம். ஒரு இலட்சம் பிரதிகள் இந்த நூல் தற்போது 1 லட்சம் பிரதிகள் விற்றுள்ளதாம்.

ஆங்கிலத்திலும் இது மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதாம். இதில் சொரயா போல பல சிறுமிகளின் கதையையும் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment