Wednesday, August 28, 2013

மிருகப்பலி பூஜை செய்தமைக்கு எதிராக பொதுபலசேன ஆர்ப்பாட்டம்

மத்துகமை, யட்டதொல சென்.ஜோர்ஜ் தோட்டத்திலுள்ள ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற மிருகப்பலி பூஜைக்கு எதிர்ப்பு தெரிவித்து களுத்துறை மாவட்டம் மத்துகமை நகரத்தில் பிக்குகள் தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த தோட்டத்திலுள்ள சிறீ காளியம்மன் ஆலயத்தில் கடந்த 25ஆம் திகதி மேற்கொள்ளவிருந்த மிருகப்பலி பூஜைக்கு எதிராக பொதுபலசேனவினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் எனினும், பொலிஸாரின் அனுமதியுடன் மிருகப்பலி பூஜை அன்று நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையிலேயே மிருகப்பலி பூஜை செய்தமைக்கு எதிர்பபு தெரிவித்து தற்போது மத்துகமையின பல பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது

No comments:

Post a Comment