அண்மையில் கிளிநொச்சிப் பிரதேசத்திலிருந்து இராணுவத்தில் இணைந்து கொண்ட பெண்கள் சிறிலங்கா இராவத்தின் பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்படலாம் என சிறிதரன் பிபிசி வானொலிச் சேவைக்கு தெரிவித்திருந்தார். உண்மைக்கும் சட்டத்திற்கும் புறம்பான இக்கருத்து தொடர்பில் சிறிதரனிடம் குற்றப் புலனாய்வுத்துறையின் விசாரணை மேற்கொண்டுவருவதாக அறியக்கிடைக்கின்றது.
இலங்கையின் அரசியல் யாப்பினை முற்றாக ஏற்றுக்கொள்கின்றேன் என்றும் இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் விசுவாசமாக இருப்பேன் என்றும் எந்தச்சந்தர்பத்திலும் இலங்கை தேசத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடமாட்டேன் என்றும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட சிறிதரனின் மேற்படி கருத்து இலங்கை இராணுவத்தின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாகவே இவர் மீது விசாரணைகள் இடம்பெறுவதாக அறியக்கிடைக்கின்றது.
கருத்துச் சுதந்திரத்தினை தவறான வழியில் பயன்படுத்தி மக்களை தொடர்ந்தும் மந்தைகளாக வைத்திருக்க முயலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் ஏமாற்று வித்தைகள் சிறிதரனுடன் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசின் மீது அபாண்ட பழி சுமத்திய குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டால் சிறிதரனது பாராளுமன்ற ஆசனமும் இலங்கை பிரஜா உரிமையும் பறிக்கப்பட்டு ஆகக்குறைந்தது 20 ஆண்டுகள் பாரவேலைகளுடன் கூடிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடலாம் என சட்டவல்லுனர்கள் கூறுகின்றனர்.
ஆனால் சிறிதரன் மேற்கண்ட குற்றச்சாட்டுக்கள் எதனையும் நேரடியாக முன்வைக்க வில்லை என மண்டாடி வருவதாகவும் உதயன் வலம்புரி போன்ற பத்திரிகைகள் தனது கருத்துக்களை மிகைப்படுத்தி விட்டதாகவும் அவர் தெரிவிப்பதாகவும் மேலும் இலங்கைநெற் அறிகின்றது.
சிறிதரன் ஓர் நீரழிவு நோயாளி. விசாணைகளின்போது அவர் சீனியின் அளவு ஏறி அவதியுற்றதாகவும் அதற்கு பரிகாரம் அளிக்கப்பட்டதாகவும் மேலும் அறியக்கிடைக்கின்றது.

No comments:
Post a Comment