Saturday, November 24, 2012

மனைவியைக் காணவில்லையென்று பொலிஸில் குளறிய இராணுவ அதிகாரி

இராணுவ அதிகாரியொருவர் வைத்தியரான தனது மனைவியைக் காணவில்லையென்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது. மாத்தறை வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவில் சுயநினைவை இழக்க செய்கின்ற வைத்தியராக கடமையாற்றிய எரந்தி கருணாரத்ன (27வயது) என்பவரையே காணவில்லை.

இவர் கடந்த வெள்ளிக்கிழமை வேலையை முடித்துக்கொண்டு ஹிக்கடுவையில் உள்ள வீட்டுக்குத் திரும்பிப்கொண்டிருந்த போது அவர் ஹபராதுவையில் வைத்து தொலைபேசி தொடர்பினை ஏற்படுத்தியதாகவும் அதற்கு பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment