Wednesday, November 28, 2012

இந்திய இழுவை படகுகளின் அத்துமீறலை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

இந்திய றோலர் படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ் கடற்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்றைய தினம் மேற்க்கொண்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் யாழ் கச்சேரியடியில் உள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. இதன்போது யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கில் ஒன்று கூடி இந்திய இலுவை படகுகளை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது அவர்கள் அடிக்காதே அடிக்காதே மீனவர் வயிற்றில் அடிக்காதே, இந்திய அரசே பதில் சொல்லு, இந்தியா ஒழிக!! ஆகிய கோசங்களை எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து இந்திய துணை தூதுவர் யாழ் அரச அதிபர் ஆகியோர்களுக்கு மகஜர் கையளித்தனர்.





No comments:

Post a Comment