Wednesday, November 28, 2012

மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து த.தே.ம.மு ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளனர்

பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தமிழ் தேசிய மக்கள் முன்னியினால் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 4ம் திகதி காலை 11.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை யாழ் பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள சோமசுந்தரப் புலவர் சிலையருகில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment