Monday, November 26, 2012

சவுதியிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கைக் கள்வர்கள்.

சவூதியில் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுச் சென்று அங்கு பல்வேறு குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட இலங்கையர்கள் பலர் அங்கு கைதாகியுள்ளனர். குற்றத்தின் பாராதூரங்களுக்கு எற்ற தண்டனைகளை பெற்ற இவர்கள் ஜெத்தா சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்த பின்னர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு, பதுளை, அம்பாறை, அநுராதபுரம், குருநாகல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே குற்றச்செயல் நாடு கடத்தப்பட்டவர்களாவர்.

நாடுகடத்தப்பட்ட அனைவரும் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment