Friday, November 30, 2012

மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்

யாழ்.பல்கலைக்கழக மாணாவர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.
இன்று காலை நடைபெற்ற பல்கலைக்கழக ஆசிரியர்களின் விசேட கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு இப்போராட்டம் நடாத்தப்பட்டது.

இப்போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக போராசிரியர்கள் விரிவுரையாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.இதன்போது மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இன்று மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரும் அரை நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment