Monday, November 26, 2012

ஈழத்திலிருந்து சீமானிடம் சில கேள்விகள் .. சந்துரு

சீமான் மாவீரர் தினத்தை முன்னிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கின்றார். ஈழத் தமிழருக்காக தனது இன்னயிரைத் தியாகம் செய்யப் போகின்றாராம். இவரின் இக் கூற்றைப் பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகின்றது. சீமானுக்கு இலங்கை தமிழ் மக்கள் மீது இருக்கின்ற

அக்கறை தமிழீழம் பெறுவது தொடர்பாக அவரின் ஆதங்கம் என்பவற்றைப் பார்க்கின்றபோது எனக்குள்ளே சில கேள்விகளை நான் அவ்வப்போது கேட்டபதுண்டு.

ஆரம்பகாலங்களின் சீமான் அவர்களின் வீர வசனங்களால், பேச்சுக்களாலும் கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன். தமிழர்களுக்கு கூடவே பிறந்த ஒரு குணமிருக்கின்றது. வீரவசனங்களைப் பேசினால் உசுப்பேறி விடுவார்கள் உயிரையும் விடத் தயங்கமாட்டார்கள். அதே போன்றுதான் சீமான் அவர்களின் பேச்சில் மயங்கியவன் நான். பின்னர் போகப்போக அவரது பம்மாத்துக்களையும் பகடாமணிகளையும் புரிந்துகொண்டேன்.

சீமானுக்கு இலங்கை தமிழ் மக்கள் மீதான அக்கறையும், தமிழீழம் எனும் உயிர் மூச்சும் எப்போது உருவானது. இந்தியாவிலே இருந்து வீர வசனங்களைப்பேசி இலங்கைத் தமிழர்களைச் சூடேற்றி இலங்கை தமிழர்களை அழிக்க நினைக்கும் இந்தச் சீமானுக்கு இப்போதுதான் அக்கறை வந்ததா?

விடுதலைப் போராட்டம் என்பது இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டதல்ல பல தசாப்தங்களையும் பல உயிர்களையும் பலி கொண்டுள்ளது. இவ்வளவு காலமும் இந்தச் சீமான் எங்கே இருந்தார்.

இந்தியாவில் இருந்து வீரம் பேசுவதைவிட களத்திலே நின்று போராடியிருந்தால் தெரிந்திருக்கம் உயிரின் வலி. உண்மையில் தமிழ் மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் தோணி ஒன்றில் ஏறி இருமணித்தியாலயங்களில் இலங்கைக்கு வந்து நேரடியாக களத்தில் இருந்து போராடி இருக்க வேண்டும்.

வெறுமனே வீர வசனம்பேசி ஈழப் பிரியனாகவும், இலங்கைத் தமிழர் மீது அக்கறை கொண்ட ஒருவராகவும் காட்டிக் கொள்ள நினைப்பதன் மர்மம் என்ன?

இலங்கைத் தமிழருக்காகவும் ஈழத்துக்காகவும் இன்னுயிரைத் தியாகம் செய்யப் போவதாக அறிக்கை விட்டிருக்கின்றார். புலிகள் களத்தில் நின்று போராடியபோது சீமானுக்கு ஏன் இந்த அக்கறை அன்று வரவில்லை? குறைந்தபட்சம் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் அரங்கேற்றப் பட்டவேளையாவது ஏன் இவருக்கு இன்னுயிரைத் தியாகம் செய்யும் எண்ணம் வரவில்லை?

தமிழ் மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் தனது அருமை அண்ணன் எனக் கூறுகின்ற பிரபாகரனிடம் அண்ணா தமிழ் மக்களை கொடுமைப்படுத்தாதே, இளைஞர் யுவதிகளை பலாத்காரமாக பிடிக்காதே, கற்பிணித்தாய்களின் உடம்பில் குண்டைக்கட்டி அனுப்பாதே என்றெல்லோ கேட்டிருக்கவேண்டும். ஆதை செய்யாத சீமாக்கு தமிழ் மக்கள் மீது அக்கறையாம். இது தமிழ் மக்கள் மீதுள்ள அக்கறையா அன்றில் புலிகளின் டொலர்கள், ஐரோக்கள், பவுண்டுகள், பிராங்குள் மீதுள்ள பிரியமா?

தனது பெயருக்கும் புகழுக்கும், அரசியலுக்கும் இலங்கை தமிழர்களை பகடைக்காய்களாக சீமான் பயன்படுத்த நினைப்பது வேடிக்கையானது. இலங்கைத் தமிழர்கள் இனிமேலும் இவ்வாறானவர்களை நம்பப்போவதுமில்லை.

மேலும் சீமானுக்கு எனது அறிவுரை நீர் உயிர் விடப்போவதாக கதை விடுகின்றாய் என எனக்கு தெரியும், ஆனால் நீ உசார் மடையன் என்பதும் எனக்கு தெரியும், ஒருநாளும் அப்படி செய்திடக்கூடாது, நீர் அப்படி செய்தால் உனது காம வித்தையில் துவண்டு கிடக்கும் முன்னாள் போராளி ஒருவனின் மனைவி உட்பட நூற்றுக்கணக்கான பெண்கள் அல்லவா தொழில்தேடி அலைவர்கள்..

No comments:

Post a Comment