Friday, May 24, 2013

நடுவானில் பறந்த விமான கண்ணாடியில் திடீர் விரிசல் - 179 பயணிகள் உயிர் தப்பினர் !!


நேற்று முன் மதியம் 6இ 205 என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12.57 மணிக்கு, 179 பயணிகளுடன் கொல்கத்தாவில் இருந்து திப்ரூகருக்கு புறப்பட்டது. விமானம் 30,000 அடி உயரத்தைத் தொட்டபோது, முன்புறக் கண்ணாடியில் விரிசல் இருந்ததை விமான ஓட்டிகள் கவனித்தனர்.

பயணத்தைத் தொடர்ந்தால் ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த விமானிகள், மீண்டும் கொல்கத்தா திரும்ப தீர்மானித்தனர். கண்ணாடி உடைவதைத் தவிர்ப்பதற்காகவும், உயரத்தினால் ஏற்படும் அழுத்தத்தைக் குறைப்பதற்காகவும், விமானத்தை உடனடியாகத் திருப்பி, உயரத்தைக் குறைத்ததனால், விமானம் ஆட்டம் காணத்தொடங்கியது.

பயணிகளிடம், தொழில்நுட்பக் குறைபாடு காரணமாக கொல்கத்தா திரும்பச் செல்வதாக அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பயந்தபோதிலும், எந்தப் பிரச்சினைகளும் இன்றி, 1.59 நிமிடத்திற்கு, விமானிகள் கொல்கத்தாவில் விமானத்தை பத்திரமாகத் தரையிறக்கினர்.

திப்ரூகர் செல்லவேண்டிய பயணிகள், மாற்று விமானத்தில் மாலை 3.32 மணி அளவில், அனுப்பப்பட்டனர். விமானம் 30 நிமிட நேரத்தில் கொல்கத்தா வந்தது. என்றாலும் என்ன நடக்குமோ என்ற கலக்கத்துடன் விமானத்தில் பயணம் செய்தோம் என்று பயணிகள் தெரிவித்தனர். -

No comments:

Post a Comment