வில்பத்து சரணாலயப் பகுதியிலுள்ள பொன்பரப்பி பள்ளிவாசல்குளம் காட்டுப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை புதையல் தோண்டிக்கொண்டிருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வன ஜீவராசி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எளுவான்குளம், கம்பஹா மற்றும் மினுவான்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இராணுவத்தின் கமாண்டோ பிரிவும் இராணுவ பிரிவும், வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment