இலங்கையில் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையி
ல் வடபகுதியின் மனிதாபிமான உதவிக்கான தேவைகள் குறித்து ஐநாவின் முக்கிய அதிகாரி ஒருவர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை நேற்று கிளிநொச்சியில் சந்தித்து உரையாடியிருக்கின்றார்.
இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக இந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்கின்றத. ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகத்தின் தலைமை அதிகாரியாகிய அக்னஸ் அசிக்கின் ஊனியு அம்மையாரும் அவருடனான அதிகாரிகளும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எஸ்.சிறிதரன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
மீள்குடியேற்றப் பகுதிகளின் நிலைமைகள் என்ன, எவ்வாறான உதவிகள் அங்கு தேவைப்படுகின்றன என்பதை நேரில் கண்டறிந்து மதிப்பிடுவதற்காக இந்த ஐநா அதிகாரி வடபகுதிக்கு விஜயம் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே இவர் வடமாகாண மாவட்டங்களின் முக்கிய சிவில் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், மீள்குடியேறியுள்ள குடும்பங்கள், போரினால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினர் என பலதரப்பட்டவர்களையும் சந்தித்திருக்கின்றார். அதன் பின்னர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரையும் இவர் சந்தித்திருக்கின்றார்.
இந்தச் சந்திப்பில் வடபகுதியின் முக்கிய நிலலமைகள் தேவைகள் குறித்து தாங்கள் எடுத்துக் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இதேவேளை, வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்தக் கூடாது, அந்த சபைக்கான அதிகாரங்களைக் குறைக்க வேண்டும், மாகாண சபைமுறைமையைக் கொண்டு வந்துள்ள 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்றெல்லாம் தென்பகுதியைச் சேர்ந்த கடும்போக்கு அரசியல்வாதிகள் அண்மைக்காலமாகக் கூறி வருகின்றார்கள்.
ஆயினும் அவ்வாறு எதுவும் நடைபெறமாட்டாது. அசியலமைப்பு சட்டத்தில் உள்ளாவாறாக வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெறும் என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
அதற்குப் பின்னரும், அரச தரப்பின் அதிக அதிகாரம்வாய்ந்தவர்களில் முக்கியமானவராகிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய வடமாகாண சபைக்கான தேர்தல் நடத்துவதை எதிர்த்திருக்கின்றார்.
அந்தத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற்றால் காணி பொலிஸ் அதிகாரங்களுடன் கூடிய தனிநாட்டு நிகழ்ச்சி நிரலைக் கொண்ட, அரசுக்கு விரோதமான நிர்வாகம் அங்கு உருவாகும் என்றும், அது தேசிய பாதகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் அரசாங்கத்தை அவர் எச்சரித்திருக்கின்றார்.
இது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றி கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், அதிகாரங்களற்ற மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படுமானால், அதில் போட்டியிடுவது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.
எனினும் அதிகாரங்களுடன் கூடிய வடமாகாண சபையைத் தக்க வைப்பதற்கான முயற்சிகளை ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தாங்கள் மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ல் வடபகுதியின் மனிதாபிமான உதவிக்கான தேவைகள் குறித்து ஐநாவின் முக்கிய அதிகாரி ஒருவர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை நேற்று கிளிநொச்சியில் சந்தித்து உரையாடியிருக்கின்றார்.இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக இந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்கின்றத. ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகத்தின் தலைமை அதிகாரியாகிய அக்னஸ் அசிக்கின் ஊனியு அம்மையாரும் அவருடனான அதிகாரிகளும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எஸ்.சிறிதரன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
மீள்குடியேற்றப் பகுதிகளின் நிலைமைகள் என்ன, எவ்வாறான உதவிகள் அங்கு தேவைப்படுகின்றன என்பதை நேரில் கண்டறிந்து மதிப்பிடுவதற்காக இந்த ஐநா அதிகாரி வடபகுதிக்கு விஜயம் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே இவர் வடமாகாண மாவட்டங்களின் முக்கிய சிவில் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், மீள்குடியேறியுள்ள குடும்பங்கள், போரினால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினர் என பலதரப்பட்டவர்களையும் சந்தித்திருக்கின்றார். அதன் பின்னர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரையும் இவர் சந்தித்திருக்கின்றார்.
இந்தச் சந்திப்பில் வடபகுதியின் முக்கிய நிலலமைகள் தேவைகள் குறித்து தாங்கள் எடுத்துக் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இதேவேளை, வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்தக் கூடாது, அந்த சபைக்கான அதிகாரங்களைக் குறைக்க வேண்டும், மாகாண சபைமுறைமையைக் கொண்டு வந்துள்ள 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்றெல்லாம் தென்பகுதியைச் சேர்ந்த கடும்போக்கு அரசியல்வாதிகள் அண்மைக்காலமாகக் கூறி வருகின்றார்கள்.
ஆயினும் அவ்வாறு எதுவும் நடைபெறமாட்டாது. அசியலமைப்பு சட்டத்தில் உள்ளாவாறாக வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெறும் என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
அதற்குப் பின்னரும், அரச தரப்பின் அதிக அதிகாரம்வாய்ந்தவர்களில் முக்கியமானவராகிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய வடமாகாண சபைக்கான தேர்தல் நடத்துவதை எதிர்த்திருக்கின்றார்.
அந்தத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற்றால் காணி பொலிஸ் அதிகாரங்களுடன் கூடிய தனிநாட்டு நிகழ்ச்சி நிரலைக் கொண்ட, அரசுக்கு விரோதமான நிர்வாகம் அங்கு உருவாகும் என்றும், அது தேசிய பாதகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் அரசாங்கத்தை அவர் எச்சரித்திருக்கின்றார்.
இது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றி கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், அதிகாரங்களற்ற மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படுமானால், அதில் போட்டியிடுவது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.
எனினும் அதிகாரங்களுடன் கூடிய வடமாகாண சபையைத் தக்க வைப்பதற்கான முயற்சிகளை ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தாங்கள் மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment