கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் மிருகவதையினை கண்டித்து தனக்குத் தானே தீமூட்டிக் கொண்ட பௌத்தபிக்கு, சிகிச்சை பலனின்றி நேற்று(25.05.2013) இரவு உயிரிழந்துள்ளதாக கொழும்பு வைத்தியசாலை பெலிசார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை இந்த பௌத்த பிக்குவின் தற்கொலை முயற்சி குறித்து தமக்கு எதுவும் தெரியாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார். சம்பவம் பற்றிய தகவல் தெரிந்திருந்தால் நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமல்லாது மாடுகள் கொலை செய்யப்படுவதனைத் தடுக்கும் நோக்கில் நாடாளுமன்றில் ஏற்கனவே சட்டப் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என அவர் இதன் போது குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment