Monday, May 27, 2013

மாணவியுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்த ஆசிரியர் இடமாற்றம்!

குற்றமிழைக்கின்றவரை இடம் மாற்றுவதன் மூலம் நியதாயத்தை பெற்றுக் கொள்ளமுடியாது! தகுந்த தண்டனை வழங்கப்பட்ட வேண்டும் - பெற்றோர்

ராகலையில் அமைந்துள்ள தமிழ் பாடசாலை ஒன்றின் கணித பாட ஆசிரியர் ஒருவர் அதே பாடசாலையில் தரம் 11ல் பயிலும் மாணவியுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த ஆசிரியர் தற்காலிகமாக பிறிதொரு பாடசாலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார் எனவும், அவர் மீதான விசாரணைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் வலப்பனை கல்வித் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

குறித்த ஆசிரியர் மாணவியுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்ததாக தெரியவந்துள்ளதென குறித்த பாடசாலையைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். அத்துடன் இவ்வாறு மாணவர்களை சீரழிக்க முயற்சிக்களுக்கு தகுந்த தண்டனையை பெற்றுக் கொடுக்குமாறும் குற்றமிழைக்கின்றவரை இடம் மாற்றுவதன் மூலம் நியதாயத்தை பெற்றுக் கொள்ளமுடியாது எனவும் தகுந்த தண்டனை வழங்கப்பட்ட வேண்டும் என்றும் பாடசாலை வளாத்தில் திரண்டிருந்த பெற்றோர் தெரிவித்தனர்.

எனினும், குறித்த ஆசிரியரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின்போது தான் மாணவியுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சிக்கவில்லை என்றும் தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டமையையை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்ததாக வலப்பனை வலய கல்வித் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment