மட்டக்களப்பில் பௌத்த மத நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதை தடைசெய்து நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூலம் முன்வைக்கப்பட்ட மனுவை கருத்திக்கொண்டே நீதிமன்றம் இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளது. மேலும் இந்தத் தடைஉத்தரவு மட்டக்களப்பு ஸ்ரீ மங்கலாராமாதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
சுமனரத்ன தேரரால் மட்டக்களப்பு பிள்ளையார் வீதியில் நிர்மாணிக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்ட புத்த சிலைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அதனது கட்சி உறுப்பினர்கள் மூலம் நேற்று முன்தினம் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 'பௌத்த சிலைகள் மூலமாக நாட்டைக் கைப்பற்ற முனைகிறார்கள்' எனவும் அவர்கள் அங்கு குறிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள எம்பிட்டியே சுமனரத்ன தேரர், இந்நடவடிக்கை மூலம் தான் பெரும் சோகத்திற்குள்ளாகியிருப்பதாகவும், தீக்குளித்தல் அல்லது வேறேதெனும் முறையினால் தன் உயிரை நீக்குவதல்லாமல் தனக்கு செய்யக் கூடிய மாற்றுவழிகள் ஏதும் இனி இல்லையென்றும் குறிப்பிடுகிறார்.
(கேஎப்)
No comments:
Post a Comment