Saturday, May 4, 2013

வெள்ளத்தால் 300 குடும்பங்கள் பாதிப்பு!


flood
மழை மற்றும் வெள்ளம் காரணமாக கம்பஹா வத்தளை பகுதிகளில் 300 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அவர்களில் 69 குடும்பங்கள் பாதுகாப்பான மூன்று இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொப்டிபிலி தெரிவித்தார்.

இதேவேளை- தொடர்மழை காரணமாக மத்துகம - கலவான வீதி தொடர்ந்தும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் இரவூ நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment