Friday, May 24, 2013

யாழ்.குடாநட்டு மக்களுக்கு எப்போதும் உதவ படையினர் தயார் -ஹத்துருசிங்க

யாழ். குடாநாட்டு மக்களுக்கு படையினர் எந்த நேரமும் உதவி செய்யத் தயாராக இருக்கின்றார்கள். இடையில் யாராவது புகுந்து குழப்ப முயற்சித்தாலோ அல்லது தேவையற்ற வதந்திகள் பொய் பிரச்சாரங்களை பரப்பினாலோ அதனை நம்பி பொது மக்கள் யாரும் பயம் கொள்ளத் தேவையில்லையென யாழ். மாவட்ட படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரு சிங்க தெரிவித்தார்.

யாழ். மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வெசாக் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வெசாக் பண்டிகை பௌத்த சமயத்தவர்களுக்கு மட்டும் முக்கியமானது அல்ல. உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் இன்றைய தினத்தை கொண்டாடுகின்றார்கள்.

புத்தர் பெருமான் கூறியதைப் போன்று நாம் அனைவரும் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற வேறுபாடுகள் எதுவும் இன்றி ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.

No comments:

Post a Comment