Thursday, May 23, 2013

விசேட ரயில், பஸ் சேவைகள்



வெசாக் பூரணையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் மற்றும் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பாணந்துரை, தெற்கு களுத்துறை, அளுத்கம மற்றும் வேயாங்கொடை ஆகிய பகுதிகளுக்கு இரவு வேளையில் விசேட ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளன.

வெசாக் அலங்காரப் பந்தல்களை பார்வையிடுவதற்காக கொழும்பு மாநகருக்கு வருகைதரும் மக்களின் நலன்கருதியே இந்த ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதனைத் தவிர கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஹட்டன் மற்றும் மாகோ ஆகிய பகுதிகளுக்கும் விசேட சேவைகள் நடத்தப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எல்.ஏ.ஆர்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் புனித நகருக்கு செல்லும் பக்தர்களின் நலன்கருதி கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு பயணிக்கும் ரயில்களில் மேலதிக அறைகளை இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட ரயில் சேவைகள் நாளை மறுதினம் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் கூறியுள்ளார்.

இதேவேளை, வெசாக் பூரணையை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் நடத்தப்படுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment