Thursday, May 23, 2013

கொழும்புத் துறைமுகத்தில் தீ விபத்து!



கொழும்பு துறைமுகத்திலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் இன்று (24) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக துறைமுக அதிகாரசபை தலைவர் பியந் பந்து fireவிக்ரம தெரிவித்தார்.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக துறைமுக மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் ரோகித்த அபேகுணவர்தன குறிப்பிட்டார்.

துறைமுக தீயணைப்பு பிரிவினர்- கடற்படை- கொழும்பு நகர சபை மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் துரித விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

No comments:

Post a Comment