மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்கள் அராபியர்களால் சொல்லொணாத் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு சித்திரவதைக்குள்ளானவர்கள் ஒருவரேனும் வாராந்தம் இலங்கைக்கு வந்தவண்ணமே உள்ளனர். இந்த வரிசையில் நேற்று முந்தினம் மாத்தளை மடவள பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் மிகவும் சித்திர வதைக்குள்ளான நிலையில் இலங்கை திரும்பி மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த பெண், தன்னை அடித்து துன்புறுத்திய எஜமானர்கள் தனது தலைமுடியை வெட்டியதாகவும் பல நாட்களுக்கு தாகத்திற்கு தண்ணீர் குடிப்பதற்கு கூட அனுமதிக்க வில்லை என்றும் குறிப்பிடுகின்றார்.
அத்துடன் தனக்கான ஊதியத்தை 2 மாதங்களாகியும் வழங்காத நிலையில் ஊதியம் கேட்டபோது இரண்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் தெரிவிக்கின்றார்.
No comments:
Post a Comment