தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையில் வைத்தியசாலையின் உளநலவிடுதியில் பணியாற்றும் குறித்த ஆண் தாதிய உத்தியோகத்தர் அங்கு தங்கியிருக்கும் உளநல நோயாளர்களுடன் பழகும் விடயம், மற்றும் வைத்தியர்களின் பணிப்பினை உதாசீனம் செய்தல் சேவையில் அதிக நாட்டமின்றி இருக்கும் தாதிய உத்தியோகத்தரின் செயற்பாட்டிற்கு எதிராக வைத்தியர்கள் நேற்று(08.08.2013) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இவ்வாறு இவர் தனது கடமையினை உதாசீனம் செய்வதனை எதிர்த்து வைத்தியர்கள் நேற்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதைத்தொடர்ந்து பிராந்திய சுகாதார சேவைகள் பதில்பணிப்பாளர் சிவராணி வைத்தியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதை தொடர்ந்து உளநல விடுதியில் இருந்து குறித்த தாதிய உத்தியோகத்தரை வேறு பிரிவுக்கு தற்காலிகமாக இடமாற்றப்பட்டதுடன், அவர் மீதான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததைத் தொடர்நது வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது.
.jpg)
No comments:
Post a Comment