கண்ணனை அறிமுகம் செய்து வைத்த ரொஹான் குணரட்ண, கண்ணன் முன்னாள் புலி உறுப்பினர் என்றும் அவர் கடந்த காலங்களில் இலங்கை அரசுக்கு எதிராக செயற்பட்டு வந்தாகவும் தற்போது தனது கடந்த கால தவறுகளை உணர்ந்து தமிழ் சிங்கள மக்களிடையேயான உறவுப்பாலம் ஒன்றை கட்டியெழுப்ப அரும்பாடு படுகின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவிலிருந்து இலங்கைவந்து கரவெட்டி பகுதியில் தங்கியுள்ள தமிழ் சீஎன்என் கண்ணன் பயங்கரவாத நிபுணர் ரொஹான் குணவர்த்தனவின் மேற்பார்வையில் இலங்கையில் செயற்பட்டு வருகின்றார். கண்ணன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார் என்று ரொஹான் குணரெட்ண திருப்தியடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.
தமிழ் மக்களுக்கு தவறான கருத்துக்களை கடந்த காலங்களில் சொல்லிவந்த தமிழ் சீஎன்என் உரிமையாளரான கண்ணன் தற்போது இன நல்லிணக்கத்திற்காக கண்டிக்கு சென்று விளக்கேற்றியுள்ளார். இது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால் தனது இந்த மனமாற்றம் தொடர்பில் தனது இணையத்தில் எவ்வித செய்தியையும் வெளியிடாமையும் தான் இன நல்லிணக்கத்திற்காக விளக்கேற்றியது போல் தான் பிரதி நிதித்துவப்படுத்துவதாக பேராதனை பல்கலைகழகத்திற்கு கூறப்பட்ட புலம்பெயர் மக்கள் அனைவரும் தன்னைப்போல் அர்பணிப்புப்புடன் விளக்கேற்றவேண்டும் என்று இதுவரை கோராமையும் சந்தேகத்தை எழுப்புகின்றது.
ரொஹான் குணரத்னவின் மேற்பார்வையில் கரவெட்டி பிரதேசத்தில் தங்கியுள்ள கண்ணன் அங்கு பாரிய வீடு ஒன்றினை அமைத்து வருகின்றார். அந்த வீட்டின் கட்டுமானப்பணிகளுக்கு தெற்கிலிருந்து பெரும்பாண்மையின தொழிலாளிகள் அழைத்துவரப்பட்டுள்ளனர். இவ்வாறு தெறிகிலிருந்து தொழிலாளிகள் அழைத்து வரப்பட்டமைக்கு காரணம் இனிமேல் தமிழர்களை கண்ணன் நம்பமாட்டாராம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வீடானது ஜனாதிபதி செயலகத்தின் மேற்பார்வையில் இயங்கிக்கொண்டிருக்கும் கார்மொனி சென்டர் என்படுகின்ற இணைப்பு இல்லத்திற்கே என்று கண்ணன் தெரிவித்துள்ளார். இவ்வீடு அமைத்து முடிந்தவுடன் வீட்டினை இணைப்பு இல்லத்திற்கு நன்கொடையாக கண்ணன் வழங்குவார் என குறித்த அமைப்பினர் வாயை திறந்து வைத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment