தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முக்கியஸ் தர்கள் பலர், ஜனாதிபதியை சந்தித்து, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்க முன்வந்து ள்ளனர்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தின் போது, இவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து ள்ளனர்.
இன, மத, மாகாண பேதமின்றி, நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி முன்னெ டுத்து செல்லும் வேலைத்திட்டங்களுக்கு பூரண ஆதரவை வழங்கப்போவதாக, அவர்கள் உறுதியளித்தனர்.
1988ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, 2010ம் ஆண்டு பொது தேர்தலில் தமிழ் தேசிக் மூட்டமைப்பில் போட்டியிட்ட சிரேஷ்ட உறுப்பினரான வசந்தன் சிவனந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தனரான வட்டுக்கோட்டை பிரதேச சபை உறுப்பினரும், அதன் பிரதான அமைப்பாளருமான வீரசிங்கம் சிவகுமார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பிரதேச சபை உறுப்பினரும், உப தவிசாளருமான மாணிக்கம் லோகசிங்கம், சுயேட்சைக் குழுக்களில் இம்முறை மாகாண சபை தேர்தலில் போட்டியிடவிருந்த கிருஷ்ணபிள்ளை செல்வராஜா, நல்லநாதன் திருலோகநாதன் ஆகியோரும், ஐக்கிய மக்கள் சுதாந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டனர்.
1995ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை ஈ.பி.டி.பி யின் வவுனியா மாவட்ட அமைப்பாளராக செயற்பட்ட கணபதி கதிரவேல் உட்பட அக்கட்சியின் முக்கியஸ் தரான சஷீந்திரன் ஆகியோரும், அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஜனாதிபதியை சந்தித்து, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டனர்.
No comments:
Post a Comment