Thursday, November 22, 2012

இலங்கை வங்கியின் தலைவர் இராஜினாமா?

இலங்கை வங்கியின் தலைவர் காமினி விக்ரமசிங்க இராஜினாமா கடித்தினை சமர்ப்பித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை இவரது இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் இந்த வருட இறுதி வரை விக்ரமசிங்க கடமைகளில் ஈடுபடுவார்.

கசகஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
நாடு திரும்பிய பின்னர் இலங்கை வங்கியின் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment