Sunday, April 28, 2013

நடிகையின் குளியல் காட்சியை 13 டேக்குகள் வரை எடுத்த இசக்கி இயக்குனர்

மெரிட் மீடியா நிறுவனம் தயாரிப்பில், எம்.கணேசன் என்ற அறிமுக டைரக்டர்  கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்யும் படம், ‘இசக்கி.’ இனிது இனிது  உள்பட சில படங்களில் நடித்த சரண், இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.  ஆஷிதா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கிறார்.

படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில், ஆஷிதா வீட்டு ஹாலில் கதாநாயகன்  அமர்ந்திருக்கிறார். அது தெரியாமல், ஆஷிதா குளித்துவிட்டு ஒரு துண்டை  மட்டும் உடம்பில் கட்டிக்கொண்டு குளியல் அறையில் இருந்து வெளியே வருகிறார்.  கதாநாயகன் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சியில் சத்தம்  போடுகிறார்.

இந்த காட்சியை படமாக்கும்போது கதாநாயகி கட்டிக்கொண்டிருந்த துண்டு கீழே  விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் காட்சியில் அவர்  யதார்த்தமாக நடிக்க வேண்டும் என்பதால், அந்த காட்சி 13 ‘டேக்’குகள்  எடுக்கப்பட்டன. சசிகுமார் ஒளிப்பதிவு செய்தார். சென்னை, மதுரை, காரைக்குடி,  திண்டுக்கல், ஊட்டி ஆகிய இடங்களில் வளர்ந்த இந்த படத்துக்கு ஸ்ரீகாந்த்  தேவா இசையமைக்கிறார்.

No comments:

Post a Comment