Monday, April 29, 2013

ஹம்பாந்தோட்டையில் நவீன ஆஸ்பத்திரி

hospitalஹம்பாந்தோட்டையில் 700 கோடி ரூபா செலவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஆஸ்பத்திரியொன்றை நிர்மாணிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
850 கட்டில்களுடன் கூடிய மேற்படி ஆஸ்பத்திரி நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்க நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச் சர் மைத்திரிபால சிறிசேன தனக்கு அறி வித்துள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.


ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள மாகாண ஆஸ்பத்திரிகளில் ஏதும் குறை பாடு இருந்தால் அவற்றை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கி உள்ளார்.

இதன்படி சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால- சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் லால் பனாபிடிய- அடங்கலான குழு ஹம்பாந்தோட்டையிலுள்ள ஆஸ்பத்திரிகளை நேரில் சென்று பார்வையிட்டது.

இதன் போது ஆஸ்பத்திரிகளில் காணப்படும் குறைபாடுகளை தீர்க்கவும் மருத்துவர்கள் மற்றும் தாதிமார்களின் குறைபாட்டை நிவர்த்திக்கவும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கட்டட திருத்தப் பணிகள் மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.

இந்த விஜயத்தில் பங்கேற்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷ- புதிய கட்டட நிர்மாணப் பணிகள் மே மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்றார்.

நெதர்லாந்து அரசாங்கம் இலங்கையில் இரு ஆஸ்பத்திரிகளை நிர்மாணிக்க நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது. இதில் முதலாவது ஆஸ்பத்திரி நுவரெலியா ஆஸ்பத்திரிக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு இரண்டாவது ஆஸ்பத்திரி ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட உள்ளது

No comments:

Post a Comment