- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடகங்கள் பலப்படுத்தப்பட வேண்டுமென்பதுடன் அவை உண்மை மற்றும் நேர்மையான வழியில் பயணிக்கும் பட்சத்தில் அவற்றுக்கு முழுமையான பங்களிப்பை வழங்கத் தயாராகவுள்ளேன் .
.அத்துடன் அமையத்தின் நோக்கம் சரியானதாகவும், நேர்மையானதாகவும் இருக்க வேண்டுமென்பதுடன் இதற்கென ஒழுக்கநெறிக் கோவை அமைத்து செயற்பட வேண்டுமென்பதுடன் உண்மைச் செய்திகளை துறைசார்ந்தோரிடம் கேட்டறிந்து வெளிக்கொணர்வது ஊடகங்களின் முக்கிய பணியாகவுள்ளது. அதைவிடுத்து நடக்காததொன்றை திரிபுபடுத்தி பொய்ச்செய்திகளை வெளியிட வேண்டாமென அமைச்சர் கேட்டுக் கொண்டார் .
மக்கள் தமது கருத்து, பேச்சு, தொழில் உள்ளிட்ட சகல விடயங்களிலும் சுதந்திரமாக செயற்படவேண்டுமெனவும் தெரிவித்தார்.அத்துடன் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டென்றும், அதனை தூண்டவேண்டாமென்றும் கடந்த காலங்களில் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய இடர்பாடுகள் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.
யாழ்.ஊடகவியலாளர்களுக்கு அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுப்பது, ஊடக அமையத்துக்கென நிரந்தரக் கட்டிடம் அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்;டதுடன் அதற்கேற்ப நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கலந்துரையாடலின் போது ஈ.பி.டி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா உடனிருந்தார்.
No comments:
Post a Comment