மன்னாரில் இன்று (28) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு உறுப்பினர்கள் சந்திப்பொன்றின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும் போது, முஸ்லிம்களுக்காக தான் குரல்கொடுப்பதாகவும், முஸ்லிம்களுக்காக முன்னின்றுஉழைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.ஆளும் கட்சியிலுள்ள முஸ்லிம் தலைவர்கள், முஸ்லிம்களின் உரிமைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் விட்டுவைத்திருக்கின்றார்கள்.
இந்நாட்டுத் தமிழர்களுக்காக சம்பந்தன் எழுந்து குரல்கொடுக்கிறார். ஆனால், முஸ்லிம்களுக்காக குரல்கொடுக்க யாரும் இல்லை. இந்தக் குறையை இல்லாமற்செய்து தான் முஸ்லிம்களுக்காக்க் குரல்கொடுக்கப்போவதாக விக்கிரமசிங்க அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியில் முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகளவு நிற்கின்றபோதும், யாரும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக, அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகப் பேசுவதற்கு யரைம் முன்வருகிறார்கள் இல்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment