இலங்கைப் போக்குவரத்துச் சபை 2012 ஆம் ஆண்டு ரூபா 380 கோடி நட்டம் அடைந்துள்ளதாக மத்திய வங்கி அ றிக்கை குறிப்பிடுகிறது. அதனை சென்ற வருடத்துடன் ஒப்பிட்டு நோக்கும்போது, நூற்றுக்கு 15.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது எனவும் அவ்வறிக்கை மூலம் அறிய முடிகின்றது.இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு அரசாங்கத் திரைசேறியிலிருந்து பெருந்தொகைப் பணம் ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், 2012 ஆம் ஆண்டு ரூபா 360 கோடி ஒதுக்கப்பட்டது. நட்டமேற்படும் பாதைகளில் நட்டத்தை ஈடுசெய்யும் பொருட்டு ரூபா 220 கோடியும், சலுகைக் கட்டணத்துடன் கூடிய பிரவேசப் பத்திரங்களுக்காக ரூபா 120 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
(கேஎப்)
No comments:
Post a Comment