உதயன் பத்திரிகை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் இதுவரையில் முழுமையா

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அண்மைக்காலமாக ஊடங்கங்கள் மீதும் சில அரசியல்வாதிகள் மீதும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மற்றும் அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உண்மை நிலையை வெளிக் கொண்டுவரும் ஊடகங்கள் மீதும் மக்களின் உரிமையை வெளிப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கும் எதிராக இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வட பகுதியில் இருந்து வெளிவரும் பத்திரிகை உதயன் மீது தொடர்ச்சியாக அழுத்தங்களும் தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றமையானது இந்த நாட்டின் ஜனநாயக தன்மையினை வெளியுலகுக்கு வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.
இன்று ஊடக அடக்கு முறைகளுக்கு மத்தியிலும் தமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் பின்னிற்காமல் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு ஊடகத்தின் மீதான தாக்குதல் அதன் உண்மைத் தன்மையினை வெளிக்காட்டிநிற்கின்றது.
இவ்வாறான தாக்குதல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தவேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமையாகும்.அந்த கடமையை இன்றுவரை நிறைவேற்றாமல் இருப்பதானது அதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை தெளிவாக காட்டிநிற்கின்றது.
எனவே ஊடக அடக்குமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய பாரிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
No comments:
Post a Comment