Saturday, May 4, 2013

தன்னைக் கொலைசெய்வதற்காக சூழ்ச்சிகள் நடைபெறுகின்றன எனக் குறிப்பிடுகிறார் வெனிசியூலா ஜனாதிபதி!

கொலம்பியாவின் முன்னாள் தலைவர் அல்வாரோ உரிபே, Alvaro Uribe) தன்னைக் கொலை செய்வதற்கான சூழ்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றார் என வெனிசியூலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ குற்றம் சாட்டியுள்ளார்.

அல்வாரோ உரிபே, வெனிசியூலாவின் தென்பகுதியினருடன்ஒன்றிணைந்து தன்னைக் கொல்வதற்காக ஆவன செய்துவருவதாக குற்றம் சுமத்தப்பட்டபோதும், ஜனாதிபதி மதுரோ தன்னைக் கொலை செய்வதற்குரிய காரணிகள் எவையெனக் தெளிவாகத் தெரிவிக்காமலிருக்கின்றார்.

ஆயினும், இதில் எவ்வித உண்மைகளும் இல்லை என மறுத்துரைத்துரைக்கப்பட்டு வருகின்றது.

முன்னாள் ஜனாதிபதி ஹியுகோ வாவேஷின் மரணத்தின் பின்னர், விவாதத்திற்குள்ளான ஜனாதிபதித் தேர்தலில் பதவியை வெற்றிகொண்ட நிக்கொலஸ் மதுரோ, தமக்குப் பல முறைகளில் கொலை அச்சுறுத்தல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment