Friday, May 24, 2013

பிரித்தானியாவுக்கு ஆட்கடத்தலில் ஈடுபடுவதாக இலங்கையர் மீது குற்றசம் சாட்டப்பட்டுள்ளது!

இலங்கையர்களை பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக ஆட்கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இலங்கையர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் பிறந்து தற்போது பிரித்தானியாவில் வசித்துவரும் 50 வயதான சுப்ரமணியம் விக்னராஜா என்பவர் மீதே ஆட்கடத்தல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

லண்டன் - லுடோன் மற்றும் இசெக்ஸ் பகுதிகளில் கடந்த புதனன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் மேலும் 11 பேருடன் சுப்ரமணியம் விக்னராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment