புலிகள் வலையமைப்பிற்கு கனடாவிலிருந்து சுவிட்சர்லாந்து ஊடாக 200 மில்லியன் டொலர்கள் பிரபாகரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்பில் கனேடிய அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என திவயின செய்தி வெளியிட்டுள்ளது!பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்த வேண்டாம் என கோரிவரும் கனடா ஆயுதங்கள் கொள்வனவு செய்வதற்கு ஒரு மில்லியன் டொலர் தேவை என கனேடிய புலிகள் வலையமைப்பிடம் பிரபாகரன் கோரியதாகவும், அந்தப் பணம் ஆயுத முகவர் ஒருவருக்கு அனுப்பி வைக்கபபட்டதற்கான இதற்கான ஆதாரங்களை கனேடிய பொலிஸார் கண்டு பிடித்திருந்தும் ஏன் அது தொடர்பில் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க வில்லை என திவயின பத்திரிகை சாடியுள்ளது.
மேலும் தற்போது கனடாவில் புலி ஆதரவாளர்கள் 300க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களை நடாத்தி வருவதாக கனேடிய தமிழ் காங்கிரஸிலிருந்து மீட்கப்பட்ட ஆவணங்களிலிருந்து இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment