Saturday, May 4, 2013

சந்திரிக்கா - சிராணி கூட்டுச்சேர்ந்து புதிய கட்சி ஆரம்பிக்கப் போகிறார்களாம்... தேசிய அமைப்பாளராக விமுக்தி குமாரத்துங்க!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா இருவரினதும் தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என நம்பத்தகுந்த செய்திகள் அடிபடுகின்றன.

ஆரம்பிக்கப்படவுள்ள அந்த புதியகட்சிக்குத் தேவையான அனைத்துப் பொருளுதவியையும் மேற்கத்தேய அரசாங்கம் ஒன்று, இலங்கையிலுள்ள தனது தூதுவராலயத்தின் மூலம் வழங்குவதற்கு முன்வந்துள்ளதெனவும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் புதிய கட்சிக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பிரபலங்களும், தற்போது அரசாங்கத்தில் பதவி வகிக்கின்ற முக்கிய உறுப்பினர்கள் பலரும் ஒன்றிணைவதற்கு முன்வந்துள்ளதாகவும், சிராணி பண்டாரநாயக்கா தனது சட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்ததும் உடனடியாக புதிய கட்சி சார்ந்த விடயங்களில் ஈடுபடவுள்ளதாகவும் அறியக்கிடக்கின்றது.

புதிய கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரத்துங்கவின் புதல்வன் விமுக்தி குமாரத்துங்கவை நியமிக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

(கேஎப்)

No comments:

Post a Comment