யாழ்ப்பாணத்தில் வெசாக் வலயம் அமைக்கும் பணிகளில் முழுவீச்சில் இராணுவத்தினர்.யாழ்ப்பாண குடாநாட்டில் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட வெசாக் வலயமொன்று யாழ் நூலகத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ளது.
இதில் யாழ் நூலகத்தில் இருந்து மணிக்கூட்டுக் கோபுரம் வரை வெசாக் கூடுகள் மற்றும் அலங்காரத் தோரணங்களும் காட்சிப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆரியகுளம் நாகவிகாரைக்கு அருகிலும் சிறு பந்தல் அமைக்கப்பட்டு வெசாக்கூடுகள் காட்சிப்படுத்தப்படுகின்றது.
இங்கு 50க்கும் மேற்பட்ட தானங்கள் (தன்சல்) அமைக்கப்பட்டுள்ளன.
சோறு, நூடில்ஸ், மரவள்ளி கிழங்கு, குளிர்பானம், மஞ்சள் சோறு, பழங்கள், கோப்பி உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் மக்களுக்கு தானமாக வழங்கப்பட உள்ளது.
யாழ்ப்பாணத்தை அண்டிய பகுதிகளில் காணப்படும் பௌத்த விஹாரைகளில் விசேட வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.
படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணிகள் என பலரும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment