சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்புப் பணிகள் இன்று மாலை முதல் ஆரம்பமாகவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுசந்த சில்வா தெரிவித்தார்.
எரிபொருள் இன்மையினால் கடந்த சில நாட்களாக சுத்திகரிப்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததாகவும்- தற்போதைய நிலைமையின் கீழ் நாளாந்தம் 5000 மெட்ரிக் தொன் எண்ணெய்யை சுத்திகரிக்க எண்ணியுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
ஓமானிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள எண்ணெய்யை சுத்திகரிக்கும் பணிகளே இன்று ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இறக்குமதி செய்யப்பட்டுள்ள எரிபொருளைத் தாங்கிய கப்பல் இன்று நண்பகல் 12 மணியளவில் இலங்கையை வந்தடையவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment