கோச்சடையான் படத்துக்காக ரஹ்மான் இசையில் முதன் முறையாக இந்தியில் பாடியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். | மகள் சௌந்தர்யாவின் இயக்கத்தில் ரஜினிகாந்து நடித்துள்ள படம் கோச்சடையான்.
இந்த படத்துக்காக ரஹ்மான் இசையில் தமிழில் ரஜினிகாந்த் பாடியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்நிலையில் இந்தி பதிப்புக்காக தன் சொந்த குரலில் முதன் முறையாக ரஜினி பாடியுள்ளார். இந்த பாடலை இர்ஷத் கமில் என்பவர் எழுத, நேற்று பதிவு செய்தார் ரஹ்மான். பொதுவாக தான் எந்த மொழியில் நடித்தாலும் தன் சொந்தக் குரலில் டப்பிங் பேசுவதுதான் ரஜினி வழக்கம். அவருக்கு இந்தி மிக நன்றாகத் தெரியும். இதுவரை அவரது அனைத்து இந்திப் படங்களிலும் அவரே பேசியுள்ளார். ஆனால் இந்தியில் பாடுவது இதுதான் முதல் முறை. தமிழில் மன்னன் படத்தில் இளையராஜா இசையில் ஒரு பாடல் பாடியிருந்த ரஜினி, இப்போது கோச்சடையானுக்காக ரஹ்மான் இசையில் பாடியுள்ளார். கோச்சடையான் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஜூன் முதல் வாரத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று தெரிகிறது. |
|
No comments:
Post a Comment