Tuesday, March 26, 2013

உலமாக்கள் பொய்யுரைத்தால், அவர்களை ஆந்தைகளாக்கிவிடுவேன்! - ஞானஸார தேரர்

ஹலால் சான்றிதழ் வழங்குவதை நிறுத்திவிட்டதாகக் கூறிவிட்டு, தமது இயக்கத்தையும் நாட்டையும் ஏமாற்றுகின்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உறுப்பினர்களை ஆந்தைகளாக மாற்றிவிடுவதாக பொதுபல சேனா இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

பாணந்துறையில் நேற்று மாலை நேரம் இடம்பெற்றபொதுபலசோன இயக்கத்தினரின் கூட்டத்திலேயே, அவ்வியக்கத்தின் செயலாளர் கலபொடஅத்தே ஞானஸாரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தமது இயக்கத்தை நிர்மூலமாக்கிவிடுவதற்காக சிலர் முயன்றுவருவதாகவும், அதற்கு ஒருபோதும் தாம் சளைத்துவிடப் போவதில்லையென்றும் ஞானஸார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அங்கு உரையாற்றுகையில்,

பெஷன் பார்க், நோ லிமிட் போன்ற நிறுவனங்களில் தமது பெண் பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துவதை பௌத்த - சிங்களப் பெற்றோர் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும், போயா விடுமுறை தினங்களில் சகல முஸ்லிம் வியாபார நிறுவனங்களும் மூடப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment