Wednesday, March 27, 2013

புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்தர பொங்கல்.

வடக்கில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் விழா இவ்வருடம் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றுதிரன மிகவும் சிறப்பாக நடைப்பெற்றுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற ஆலய உற்சவத்தில் நூற்றுக்கணக்கான காவடிகள், தூக்கு காவடிகள், பாற்செம்பு என பக்கதர்கள் நேர்த்திகடன்கள் நிறைவேற்ற கடந்த ஆண்டை விட இவ்வருடம் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றுள்ளது.

இவ்வருட உற்சவத்தினை முன்னிட்டு போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மிகவும் நேர்த்தியாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இவ்வருடம் புளியம்பொக்கனை ஆலயம் தனது வரலாற்றில் முதற்தடவையாக 155 மில்லியன் ரூபா செலவில் இலங்கை தேசியமின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்றைய தினம் இடம்பெற்ற பங்குனி உத்தர பொங்கல் விழாவுக்கு பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் சென்று அங்கு இடம்பெற்ற விசேட பூசை நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.












No comments:

Post a Comment