Saturday, March 30, 2013

விடுதலைப் புலிகளுக்கு உதவியோர் அனைவரையும் காட்டிக் கொடுக்க முனைகிறார் கருணா அம்மான்!

பிரபாகரனுக்கு உதவிய நாடுகளையும், அரசியல்வாதிகளையும், முழுமையாகத் தான் காட்டிக் கொடுக்கப்போவதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) குறிப்பிடுகிறார்.

போர்க் குற்றம் தொடர்பில் ‘கருணா’பற்றியும் விமர்சனங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என ‘ஹியுமன் ரைட்ஸ் வோச்’ அமைப்பின் ஆசியப் பிராந்திய பணிப்பாளர் பிரெட்லி எடம்ஸ் குறிப்பிட்டமைக்கு, கருணா அவ்வாறு விடை பகர்ந்துள்ளார்.

‘விடுதலைப் புலிகளுக்கு உதவியோர் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருப்பவன் நானே. நோர்வேயின் சுவிட்சர்லாந்து, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு நான் சுற்றுலாச் சென்றுள்ளேன். பாங்கொக் ஓட்டலுக்குச் சென்று, 409 வகையான ஆயுதங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய பிரசுரத்தை ஐசர் என்ற புலி ஆயுதப்பொறுப்புதாரிக்கு கொடுத்துவருமாறு என்னை அனுப்பியவர் எல்ரீரீஈ தலைவர் பிரபாகரன். நான் நோர்வேயிலுள்ள ஆயுத உற்பத்தி நிலையங்களுக்கஞம் சென்றிருக்கிறேன் என்றும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார். கண்ணாடி வீடுகளில் இருந்துகொண்டு கல்லெறிய வேண்டாம் என நான் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அரச சார்பற்ற நிறுவனங்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரபாகரனுக்கு குண்டு துளைக்காத வாகனத்தை வழங்கியகூட அரச சார்பற்ற நிறுவனமொன்றே என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

No comments:

Post a Comment