Saturday, March 30, 2013

‘நீதமில்லா நவநீதம் வேண்டாம்’, இலங்கையிலிருந்து ஐநாவுக்கு மனு!

இலங்கைக்கு வருகை தந்து ஐக்கிய இலங்கையைப் பாராது, உண்மையை நிலையை ஆராயாது, சர்வதேசத்தில் இலங்கைக்கு அவப்பெயரை ஈட்டிக் கொடுப்பதற்காக ஐநா மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை முயல்வதாக ஐநாவின் செயலாளர் நாயகத்திற்கு உத்தியோகபூர்வமாகமனு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த எழுத்து ஆவண மனு, ஐநாவின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ உறுப்பினர் கலாநிதி பாலித்த கொஹனவினால் ஐநாவின் செயலாளர் நாயகம் பென் கீ முன்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலவரத்தைக் காண்பதற்காகவும், இந்நாட்டு உயர்மட்டத்தினருடன் நாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகள் பற்றிப் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காகவும் வருகை தருமாறு ஆணையாளர் நாயகத்தை இலங்கை அரசு பலமுறை வேண்டிக் கொண்டது.

என்றாலும், ஆசியாவில் இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ சுற்றுலாவை மேற்கொண்ட பிள்ளை இலங்கைக்கு வருகை தந்து, உண்மையை நேரடியாகக் காணாமல் இலங்கைக் கெதிராகச் செயற்படுவது பிழையாகும் எனவும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

(கேஎப்)

No comments:

Post a Comment