பௌத்த மற்றும் முஸ்லிம்களுக்கு மத்தியில் கடந்த சில நாட்களாக நடந்தேறுகின்ற மதவாதப் பிரச்சினையினால் பர்மாவின் மெயிக்டிலா நகரத்தில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.பர்ம ஜனாதிபதி தியென் ஸென் எடுத்துள்ள இந்தத் அவசர முடிவு பற்றி அந்நாட்டு தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப, பிரச்சினை வெடிக்கின்ற பகுதியில் அரச படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பிளவினால் 20 பேர் இறந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஆயினும் இறப்புக்களின் தொகையைச் சரிவரக் கணக்கெடுக்கப்படவில்லை என பிபிசி சேவை தெரிவிக்கிறது. பிபிசி செய்தியாளர் குறிப்பிடும்போது, 20 இற்கும் மேற்பட்டோரின் தலைகளைத் தான் கண்டதாகத் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளுடன் தொடர்புற்ற சந்தேக நபர்களைத் கைது செய்துள்ளதாக மெயிக்டிலா நகரசபை உறுப்பினர் சீன் ஹெயின் பிபிசி சேவைக்குத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டோரில் பெரும்பாலானோர் பௌத்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
(கேஎப்)
No comments:
Post a Comment