Friday, March 22, 2013

நாங்கள் சொல்வதை இலங்கை கேட்டேயாக வேண்டும் - அமெரிக்கா

அமெரிக்காவினால் ஜெனீவா சம்மேளனத்தின் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைகளை மார்ச் மாதத்திற்குள் செயற்படுத்தாவிட்டால் அதற்கெதிராகச் செயற்பட அமெரிக்கா முனைந்துவருகிறது.

ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டுள்ளபிரேரணைகளை 100% இலங்கை செயற்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகவிருக்கிறது. வடக்கிலிருந்து இராணுவ பாதுகாவலரண்களை அகற்றுதல், அதிகாரத்தைப் பரவலாக்கல், இறுதிப் போரின் போது மனித உரிமை மீறப்பட்டுள்ளதா என்பதை ஆய்வதற்கு இடமளித்தல், கற்றறிந்த பாடம் ஆணைக்குழுவின் திட்டத்தை செயற்படுத்துதல், அரச சார்பற்ற நிறுவனங்கள் அவற்றிற்கேற்றாற் போல செயற்படுவதற்கு இடமளித்தல் ஆகிய பிரேரணைகளில் முக்கிய இடம் வகிக்கின்றன.

எதுஎவ்வாறாயினும், அமெரிக்கா இவ்வாறு மாற்று நடவடிக்கை எடுக்குமானால் சீனா மற்றும் ரஷ்யா தமது பலத்தைப் பயன்படுத்தி அதனைத் தோற்கடிக்கும் என ஏற்கனவே குறிப்பிட்டுள்ளன.

(கேஎப்)

No comments:

Post a Comment