நாங்கள் யுத்த்த்தில் வெற்றியடைந்த்தால் எங்கள் மீது வீண் பழி சுமத்தி, சில சர்வதேச தொலைக்காட்சிச் சேவைகள் உலகை அதிசயத்திற்குள்ளாக்கி எங்களை நாதியற்றவர்களாக ஆக்க முயற்சிப்பதாகவும், யுத்தத்தில் தோல்வியுற்று ‘ஈழம்’ கனவாக மாறியதால் எங்களிடமிருந்து பழி தீர்த்துக் கொள்ள முயற்சிசெய்கிறார்கள் எனவும் ஜனாதிபதிமகிந்த ராஜபக்ஷ, குருணாகலை போயகனை இராணுவ முகாமில் விஜயபாகு காலாற்படையினருக்கு பதக்கம் சூட்டுவிழாவின் போது குறிப்பிட்டார்.அன்று வானிலிருந்து பருப்பு மழை பொழியவைத்ததும், இலங்கைக்கு வெளிநாட்டுப் படையினரை வரவழைத்ததும் யுத்த முடிவு ஆவணங்களுக்கு தலைசாய்த்தேயாகும். வெளிநாட்டு உறவுகளைச் சரிவர செயற்படுத்தி வந்த்தாலென்னவோ சில நாடுகள் ஒன்றிணைந்து இலங்கைக்கு எதிராகச் செயற்பட்டு விடுதலைப் புலிகளுக்கு இலங்கையை பறித்துக் கொடுக்க முனைந்தது? எனவும் அவர் அங்கு கேள்வியெழுப்பினார்.
அன்றை இறுதிப் போருக்கு ஆதரவாகவும் எதிராகவும் இருந்த சிலர் இன்று அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட முனைகிறது. வெளிநாட்டுத் தலையீடுகள் எங்களுக்கு வரக்காரணம் இங்கு எங்கள் முகாமைத்துவம் சரிவர நடைபெறாததனால் அல்ல. ஏகாதிபத்தியவாதிகளுக்கும், தமிழீழக் கனவுடன் இருப்பவர்களின் தேவையினாலுமாகும் என்றும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
No comments:
Post a Comment