![]() |
| yaalvasantham |
யாழில் முன்னதைவிட இப்போது நடப்பவை தான் பாலியல்ரீதியான நடவடிக்கை. சுன்னாகம் பகுதியில் கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்த இளைஞர் ஒருவருக்கு மல்லாகம் நீதிமன்றம் மூவாயிரம் ரூபா தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
குறித்த இளைஞர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்தே குறித்த இளைஞருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் நேற்று நள்ளிரவு 11:45 மணியளவில் சுன்னாகம் நகரப் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பல தடவைகள் சுற்றிக்கொண்டிருந்த போது அப்பகுதியில் இரவு நேர ரோந்தில் ஈடுபட்ட பொலிசார் அவதானித்ததையடுத்து குறிப்பிட்ட நபரை மறித்து விசாரணை செய்தவேளையில், தான் சாவகச்சேரியைச் சேர்ந்தவர் எனவும் சுன்னாகத்தில் நடைபெறும் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து சந்தேகம் கொண்ட சுன்னாகம் பொலிசார் குறித்த நபருடைய கையடக்கத் தொலைபேசியை வாங்கி சோதனை செய்த வேளையில் அவருடைய கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படங்கள் இருப்பதைக் கண்டுபிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment