Friday, April 26, 2013

மனோகணேசன் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

கொட்டகலை பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்துகொள்ளச் சென்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து கொழும்பில் இன்று(26.04.2013) கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் ஜனநாயக மக்கள் முன்னணியின் மாகாணசபை, மாநகரசபை, நகரசபை உறுப்பினர்கள் மற்றும் ந்கொழும்பு, கம்பஹா மாவட்ட கட்சியின் செயலணியினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

No comments:

Post a Comment