வடக்கு மற்றும் கிழக்கு மகாணங்களில் நிலவி வரும் வேலையில்லாப் பிரச்சினை குறைவடைந்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவி த்துள்ளார். பொது நலவாய அமைப்புக்கான கனடாவின் சிறப்பு தூதுவர் செனட்டர் ஹக் செகாலுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யுத்ததின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மகாhணங்களில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக வேலையில்லாப் பிரச்சினை குறைவடைந்துள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இரு மாகாணங்களிலும் விவசாய துறைக்கு சமமாக மீன்பிடி துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment